தஞ்சாவூர் மாலைகள்_v0303.11
11:30 AMஹலோ நண்பர்களே.. அனைவரும் சுகம் தானே??
கிரிக்கெட் உலகக் கோப்பை ஒரு பக்கம் பரபரப்பு செய்திட்டிருந்தாலும், இந்த வாரம் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சமே இல்லை.. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிச்சிருக்காங்க.. தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி.. ஆனா வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி.. ஒரு முழு மாசம் நம்ம தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகுது??? அதுக்கு அவங்க சொல்லற காரணம், மேற்கு வங்க தேர்தல் மே 10ம் தேதி தான் முடியுதாம்.. இங்க தமிழ்நாட்டுல கொட்டாம்பட்டியில நம்ம பெருசு முனுசாமி போடப்போற ஓட்டு, கல்கத்தாவில இருக்கற ஏதோ ஒரு பானர்ஜி போடப்போற ஓட்டை பாதிக்குமாம்.. என்ன கொடுமை சார் இது??? இது எப்படி இருக்குன்னா, சமீபத்தில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படத்துல ஆர்யாவோட அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சிடும், ஆனா முதலிரவு நாலு நாள் கழிச்சி நடக்குமே அது போல இருக்கு.. படத்துல அது காமெடியா இருக்கும், ஆனா சட்டமன்ற தேர்தல்ல இப்படி காலம் தாழ்த்தி முடிவுகள் வெளியிடுவது சரியாவருமா????
()--((-------------------))--()
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி 13-4-2011.. பொதுவா 13ம் நம்பர் ராசியில்லாததுன்னு சொல்லுவாங்க.. தேர்தல் கமிஷன் இந்த தேதி அறிவிச்சதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ???
ஆனா, நியூமராலஜி படி, ஒரு தேதியின் கூட்டுத்தொகையை வைத்துதான் பலன் சொல்லுவாங்க.. அப்படி பார்த்தா, 1+3+4+2+0+1+1=1+2=3 அடடே.. 3 வருதே.. 3 யாருக்கோ பிறந்த எண்ணாச்சே... ஒரு வேளை தேர்தல் கமிஷன் தெரிந்தே தான் இந்த தேதி வச்சியிருக்கோ... (நாராயணா.. நாராயணா..)
()--((-------------------))--()
வேலியே பயிரை மேயறது நம்ம நாட்டுல ரொம்ப சகஜமா போச்சி.. அதைக் குற்றமுன்னு சொன்னா, சொல்லறவனை அந்நியமா பார்க்கற மனோநிலைக்கு இன்னைக்கு நாம் வந்துட்டோம்.. இப்படி தான் சென்ற வாரம், மிக அதிகமான நெருக்கடியுள்ள கே.கே.நகர் தொலைபேசி நிலையம் அருகில் ஒரு போலீஸ்காரர்.. அதுவும் டிராபிக் போலீஸ்காரர் வண்டியோட்டிகிட்டே தன் மொபைல் போணில் பேசிட்டுப் போறார்.. ஒரு வேளை அடுத்த உதயம் தியேட்டர் சிக்னலில் யாரையாவது மடக்கி பிடிக்க அங்கிருப்பவர்கிட்ட சொல்லிட்டு போயிட்டிருப்பாரோ??? (அட, கட்டிங் வாங்க தான்.. நீங்க வேறெதுக்கோன்னு நினைச்சா நான் பொறுப்பில்லை)
()--((-------------------))--()
கடந்த வாரம் வியக்கவைக்கும் அவுட்கள் வீடியோவில கபில் தேவ், பீட்டர் கிரிஸ்டினை ரன் அவுட் செய்யறது சரியாத் தெரியல.. அது எப்படின்னு புரியலன்னு கவிதா கேட்டிருந்தாங்க.. அவங்களுக்காக அந்த அவுட்டின் எக்ஸ்க்லூஸிவ் வீடியோ..
பவுலர் பந்து வீச வரும் போது நான் ஸ்ட்ரைக்கர் (ரன்னர்) தனது கிரீஸைவிட்டு வெளியே சென்று, அப்போது பவுலர் பந்து வீசாமல் ரன்னரை அவுட் செய்வது.. இதுக்கு பேர் மன்கட் (Mankad) அவுட்.. இதுக்கு ஏன் இந்த பேர் வந்திச்சின்னா.. முதன்முதலில் நம்ம விநோ மன்கட் (Vinoo Mankad) தான் 1947ல் ஆஸி அணிக்கெதிரா இப்படி அவுட் செய்ய ஆரம்பிச்சார்.. முதல் மன்கட் அவுட்டான வீரர் “பில் பிரவுன்”
()--((-------------------))--()
::வரலாறு முக்கியம் அமைச்சரே::
1923 - Time இதழ் முதன்முறையாக வெளியிடப்பட்டது..
1938 - சவுதி அரேபியாவில் எண்ணை வளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது..
1839 - டாடா குழுமத்தின் நிறுவனர் திரு.ஜம்செட்ஜி டாடா பிறந்த நாள்..
1847 - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், பிறந்த நாள்..
1970 - பாக் கிரிக்கெட் முன்னாள் கேப்டன், இன்சமாம் உல் ஹக் பிறந்த நாள்..
1707 - முகலாய மன்னன், அவுரங்கசீப் இறந்த நாள்..
இப்போதைக்கு அம்புட்டு தான்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்..
மீண்டும் சந்திப்போம்.. வரட்டா...
(பிடிச்சிருந்தா 4 வார்த்தை சொல்லிட்டு போங்க.. பிடிக்காட்டி 4 வார்த்தை திட்டிட்டு போங்க.. ஆனா ஒன்னுமே சொல்லாம போகாதீங்க..)
அன்புடன்,
ஹாட்-ட்ரிக் சாதணை !!
11:30 AM::ஹாட்-ட்ரிக் (Hat Trick)::
விளையாட்டில் ஒரு வீரர் அடுத்தடுத்து மூன்று முறை குறிப்பிட்ட சாதணையை நிகழ்த்துவது..
::தோற்றம்::
முதன்முதலில் “ஹாட்-ட்ரிக்” என்ற சொல் 1940ல் தான் வழக்குக்கு வந்தது. முதன்முதலில் NHL என்றழைக்கப்படும் ஐஸ் ஹாக்கியில் தான் பயன்படுத்தப்பட்டது என்றால்

வியப்பாக இருக்கு.. 1940ல் கனடா நாட்டின் “சாமி டாஃப்ட்” ஒரு பெரும்புள்ளி.. ஐஸ் ஹாக்கி போட்டியில் ஒரே மேட்சில் 3 கோல் அடிக்கும் வீரருக்கு தனது ஹாட், அதாவது தொப்பி, பரிசளிப்பதாக அறிவித்தார்.. “அலெக்ஸ் கலேட்டா” என்ற வீரர் தான் முதல் ஹாட்-ட்ரிக் கோல் அடித்தவர். டாஃப்ட் தான் அறிவித்தபடி கலேட்டாவுக்கு தனது ஹாட்டைப் பரிசளித்தார்.. அது முதல், ஐஸ் ஹாக்கியில் ஒரே போட்டியில் 3 கோல் அடிக்கும் வீரருக்கு பார்வையாளர்கள் தங்கள் தொப்பியை ஐஸின் மேல் தூக்கி போட ஆரம்பித்தனர்.. அன்றைய காலங்களில் தொப்பி என்பது ஒரு கவுரவமான ஒரு சின்னமாக கருதப்பட்டது.. ஒருவர் தனது தொப்பியை மற்றவருக்காகக் கழற்றினார் என்றால் அது அவருக்கு செய்யும் மரியாதையாக கருதப்பட்ட காலம்.. நம்ம சினிமாவிலும் நாம் இதனைப் பார்த்திருக்கிறோம்.. ஒருவர் இறந்தப்பின்னர் அங்கே வரும் போலீஸ் தனது தொப்பியைக் கழற்றி மரியாதை செய்வார்கள் (எல்லாம் முடிஞ்ச பிறகு தானே நம்ம போலீஸ் வரும்ன்னு யாரும் பேசப்படாது).. ஆக “ஹாட்-ட்ரிக்” என்பது வீரர்கள் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற வீரர்களால் செய்யப்பட்ட ட்ரிக். பின்னர் “ஹாட்-ட்ரிக்” வேறு விளையாட்டுகளிலும் பயன்படுத்த ஆரம்பித்தனர்..
::கிரிக்கெட் ஹாட்-ட்ரிக்::
இன்று “ஹாட்-ட்ரிக்” கிரிக்கெட் போட்டிகளில் மிகப் பிரபலமாக, வீரர்களால் பெருமையான சாதணையாக பார்க்கப்படுகிறது.. கிரிக்கெட்டில் ஒரு பந்து வீச்சாளர் அடுத்தடுத்த பந்துகளில் 3 விக்கெட் எடுப்பது “ஹாட்-ட்ரிக்” சாதணை என அழைக்கப்படுகிறது..
அடுத்தடுத்த பந்துகளில் என்பது ஒரே ஓவரிலும் இருக்கலாம், அந்த வீரரின் அடுத்த ஓவரிலில் முடியலாம்.
1988 டிச 2ம் தேதி, ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர்
“மெர்வ் ஹூக்ஸ்” மே.தீவுகளுக்கு எதிராக ஒரு வித்தியாசமான முறையில் ஹாட்-ட்ரிக் சாதணைப் படைத்தார்.. அவர் செய்தது, ஒரு ஓவரின் கடைசி பந்தில் “ஆம்புரோஸ்” விக்கெட்டை வீழ்த்தினார்.. அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தில் “வால்ஷ்” விக்கெட்டை வீழ்த்தினார்.. அத்துடன் மே.தீவுகளின் இன்னிங்ஸ் முடிந்தது.. மே.தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ஹூக்ஸ் தனது முதல் பந்தில் “க்ரீனிட்ஜ்” விக்கெட்டை வீழ்த்தினார்.. ஆக, அது ஒரு ஹாட்-ட்ரிக் சாதணை.. இது போல ஒரு வித்தியாசமான சாதணையை இதுவரை யாருமே செய்ததில்லை..இலங்கை அணியைச் சேர்ந்த “லாசித் மலிங்கா” தொடர்ச்சியா 4 விக்கெட் எடுத்து பரபரப்பைக்கிளப்பினார்.. 2007 உலகக் கோப்பைப் போட்டியில் தெ.ஆப் க்கு எதிரான ஆட்டத்தில தான் இந்த சாதணை.. விக்கெட்டை பறிகொடுத்த வீரர்கள் ஒன்னும் சாமாணியர்கள் இல்லை.. ஷான் பொல்லாக், ஆண்ட்ரூ ஹால், ஜாக் காலீஸ் மற்றும் மக்காயா நிட்டினி.. இது போல 4 பந்துல 4 விக்கெட் வீழ்த்தியது இவர் மட்டும் தான்..
::ஒரு நாள் போட்டி::
ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 28 முறை ஹாட்-ட்ரிக் செய்திருக்காங்க.. அதுல பாக். வீரர்கள் “வாசிம் அக்ரம்” , “சாக்குலின் முஷ்டாக்” மற்றும் இலங்கை வீரர் “சாமிந்த வாஸ்” மற்றும் “லாசித் மலிங்கா” ஆகிய 4 பேரும் 2 முறை ஹாட்-ட்ரிக் சாதணை படைச்சியிருக்காங்க..
:: டெஸ்ட் போட்டி::
டெஸ்ட் போட்டியில இதுவரை 38 முறை ஹாட்-ட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கு.. டெஸ்ட் போட்டியின் ஹாட்-ட்ரிக்கில் கொஞ்சம் சுவாரசியமான விஷயங்கள் இருக்கு..
- 1912ல் ஆஸி வீரர் “ஜிம்மி மாத்யூஸ்” தெ.ஆப் க்கு எதிரா 2 இன்னிங்ஸிலும் ஹாட்-ட்ரிக் எடுத்தார்.. இதுல இன்னும் விசேஷம் என்னன்னா, இரண்டுமே ஒரே நாள்: மே 28, 1912
- ஆஸி வீரர் “ஹூக் ட்ரம்பில்”, “ஜிம்மி மாத்யூஸ்” மற்றும் பாக் வீரர் “வாசிம் அக்ரம்” ஆகிய 3 பேரும் இரண்டு முறை ஹாட்-ட்ரிக் செய்திருக்கிறாங்க..

- பாக் வீரர்கள் “மொகமத் சாமி” மற்றும் “வாசிம் அக்ரம்” ஆகிய 2 பேர் மட்டுமே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஹாட்-ட்ரிக் செய்தவர்கள்..
- இதுல “வாசிம் அக்ரம்” மட்டுமே டெஸ்டில் 2 முறை, ஒரு நாள் போட்டியில் 2 முறை ஹாட்-ட்ரிக் செய்தவர்..
- பாக் வீரர்கள் எடுத்த ஹாட்-ட்ரிக் எல்லாமே இலங்கை அணிக்கு எதிராக..
- நம்ம பையன் “இர்ஃபான் பதான்” மட்டுமே ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்-ட்ரிக் செய்தவர்.. சூப்பரில்ல...
உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக்::
உலகக் கோப்பைப் போட்டிகள்ல இதுவரை 6 முறை மட்டுமே ஹாட்-ட்ரிக் சாதணை செய்திருக்காங்க.. முதல்ல ஆரம்பிச்சி வச்சது நம்ம பையன் “சேட்டன் ஷர்மா” தான்.. நியூ. அணிக்கெதிரா 1987ல் இதைச் செய்தார்..
பாக் வீரர் “சாக்குலின் முஷ்டாக்” 1999ல் நடந்த உலகக் கோப்பைப் போடியில ஜிம்பாப்வே அணிக்கெதிரா ஹாட்-ட்ரிக் செய்தார்..
2003ல் தெ.ஆப்ரிக்காவில நடந்த உலகக் கோப்பையில இலங்கை வீரர் “சமிந்தா வாஸ்” மற்றும் ஆஸி வீரர் “பிரட் லீ” இருவரும் ஹாட்-ட்ரிக் சாதணை செய்தனர்.. இதில் பிரட் லீ வீழ்த்திய / வீசிய 3 பந்துகளும் இன்னிங்ஸின் முதல் 3 பந்துகள் என்பது குறிப்பிடத் தக்கது.. சமிந்தா வாஸ் வீழ்த்திய / வீசிய 3 பந்துகளும் ஆட்டத்தின் முதல் 3 பந்துகள்.. இத்தகைய சிறப்பு இவர்களுக்கு மட்டுமே..
பின்னர் 2007ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில தான் இலங்கை வீரர் லாசித் மலிங்காவோட 4 பந்து 4 விக்கெட் ருத்ரதாண்டவம் அறங்கேறியது..
நேற்று முன்தினம் (பிப் 28,2011) நடந்த போட்டியில மே.தீ வீரர் “கேமர் ரோச்” நெதர்லாந்து அணிக்கெதிரா ஹாட்-ட்ரிக் செய்திருக்கிறார்..
நேற்று (மார்ச் 01,2011) நடந்த கென்யாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் “லாசித் மலிங்கா” 6 விக்கெட் வீழ்த்தினார்.. அதில் ஒரு ஹாட்-ட்ரிக்.. தனது 6வது ஓவரின் கடைசி பந்திலும் 7வது ஓவரின் முதல் 2 பந்துகளிலும் இது நிகழ்த்தப்பட்டது.. இதன் மூலம் உலகக் கோப்பையில் இரு முறை ஹாட்-ட்ரிக் செய்த முதல் வீரர் என்ற பெருமையைத் தட்டிச்செல்கிறார் மலிங்கா.. வாழ்த்துக்கள்..
“ஹாட்-ட்ரிக்” சாதணை முதலில் ஐஸ் ஹாக்கியில ஆரம்பிச்சாலும் இன்று அதிகமா பேசப்படறது கிரிக்கெட்டில தான்.. இன்னும் சொல்ல போனா, இன்றைக்கு எதை 3 முறை செய்தாலும் ஹாட்-ட்ரிக்ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டோம்.. அதுல பாருங்க நிறைய பேர்
எப்போதுமே நம்ம ஆளுங்க செய்யற சாதணையே தனி தான.. ஜாகீர் கான் பந்து வீச்சில் நம்ம வீரர்கள் செய்த ஹாட்-ட்ரிக்கைப் பாருங்க..
இப்படியெல்லாம் ஹாட்-ட்ரிக் செய்ய நம்ம வீரர்களைவிட்டா வேறு ஆளே இருக்க மாட்டாங்க..
நன்றி: விக்கிபீடியா & யூடியூப்
and its a tie...
11:30 AMகிரிக்கெட் நம்ம நாட்டில் ஒரு மதமாகவே மாறி ரொம்ப நாளாச்சி..
இந்திய அணி என்னைக்குமே சுலபமா வெல்லக்கூடிய ஒரு மேட்சையும் ஒரு த்ரில் குடுக்காம வெற்றிபெறாது.. டிவியில பார்த்தாலும் சரி, நேரில் ஸ்டேடியம் போய் பார்த்தாலும் சரி, சேர் நுணியில நம்ம உட்கார வைக்காம ஒரு மேட்சை முடிக்க மாட்டாங்க..
நேற்றும் அப்படியே.. சரி இவங்க இப்படி தான்.. கடைசில ஜெயிச்சிடுவாங்கன்னு பார்த்தா.. ரொம்ப சிறப்பா ஆடி கடைசி பந்துல ரன் எடுக்காம கட்டுக்கோப்பா விளையாடி சமன் செய்துட்டாங்க..
டோனி பேசும் போது.. “ஸ்ஸ்ப்ப்ப்ப்பா” ந்னு ஒரு நிம்மதி தெரிஞ்சது.. (என்ன கொடுமை சார் இது.. ஜெயிக்க வேண்டிய ஸ்கோர்.. தோற்க வேண்டிய மேட்ச்)
சரி..
ஒரு மேட்ச் டை ஆகுதுன்னா என்னா??? இரு அணிகளும் சமமான ரன்கள் எடுப்பது.. இரண்டாவதா பேட் செய்யும் அணி, முதலணி எடுத்த ரன்களையே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழப்பது (அ) அனைத்து பந்துகளையும் முடிப்பது..
நேற்று டையில் முடிந்த இந்தியா - இங்கிலாந்து போட்டி கிரிக்கெட் வரலாற்றில் டை ஆன 24ஆவது போட்டி..
1971ல் முதல் ஒரு நாள் போட்டிகள் ஆரம்பித்தது.. ஆரம்பித்து சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் 1984ல் மே.தீ. - ஆஸி அணிகள் மோதிய 247வது ஒரு நாள் போட்டி தான் முதன்முதலில் டையில் முடிந்த போட்டி..
டையில் முடிந்த முதல் ஒரு நாள் போட்டி
மீண்டும் ஆஸி அணி இங்கிலாந்து அணியுடன் 1989ல் மோதிய போட்டி டையில் முடித்தது.. அந்த போட்டி 567வது ஒரு நாள் போட்டி.. அதற்கப்பறம் கடந்த 22 ஆண்டுகளில் 22 ஒரு நாள் போட்டிகள் டையில் முடிஞ்சியிருக்கு.. பங்களாதேஷைத் தவிர எல்லா அணிகளும் டை ஆன போட்டிகளில் விளையாடியிருக்கு.. எல்லாத்துலயும் மல்லுக்கு நிக்கிற ஆஸி அணி இதுவரை 8 போட்டிகளை டை செய்திருக்கு (இதுல 3 போட்டிகள் தெ.ஆப் வுடன்).. இந்தியா இது வரை 4 போட்டிகள் டை செய்திருக்கு..
நன்றி: விக்கிபீடியா, யூ டியூப்
தஞ்சாவூர் மாலைகள்_v2402.11
11:22 PMமக்களே.. எல்லாரும் நல்லாயிருக்கீங்களா.. சென்ற வாரம் மிக இனிமையாக கடந்தது..
நண்பர் சஞ்சய் திருமணத்திற்காக சென்னை - தர்மபுரி - மொரப்பூர் - தர்மபுரி - சென்னை டிரிப் இன்னும் சில மாதங்களுக்கு மகிழ்வோடு அசைபோடும் டிரிப்பாக அமைந்தது.. நிறைய பதிவர்களை சந்திக்க வாய்ப்பாக அமைந்தது.. குறிப்பாக, எழுத்தில் மட்டுமே ரசித்துவந்த அண்ணன் ஜாக்கி சேகரைச் சந்தித்தேன்..
:: திருமண கொண்டாட்டத்தில் செவிக்கினிமையான இரு வாசனங்கள் ::
- யோவ்.. எழுதும்போது தான் எல்லாருக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்.. உனக்கு மட்டும் தான்யா பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்..
- டேய்.. டேய்.. டேய்.. ஸ்பீட் பிரேக்கர் வந்தா, பிரேக்க அமுக்கு.. ஹாரனை அமுக்காத.. அது நகராது..
யாரு பேசினதுன்னேல்லாம் கேட்கப்படாது..
:: சந்தித்த சில பிரபலங்கள் ::
நபீஷா; நிலா; ஜெயஸ்ரீ; ஆதர்ஷ்; மேகா; மீரா
நண்பர் சஞ்சய் – இந்துமதி தம்பதியினருக்கு என் வாழ்த்துக்கள் & நன்றிகள்..
()--((-------------------))--()
:: கிரிக்கெட் ஃபீவர் ::
கிரிக்கெட்டில் அவுட்டாவதற்கு எத்தனை வழிகள் இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்??? (விடை கடைசியில்) அட இப்படியெல்லாமா அவுட்டாவாய்ங்க என வியக்கவைக்கும் டாப் 5 அவுட்கள்..
இதுல கடைசியில ஷேர்ன்வார்னே பந்துவீசி ஒருத்தரை அவுட்டாக்குறார் பாருங்க.. அந்த பந்து சுமார் 2.5அடி திரும்பி ஸ்டம்ப்பை சாய்க்கிறது.. ஷேர்ன் வார்னே வீசிய அந்த குறிப்பிட்ட பந்து ”Ball of the millennium” என்றும் “The Ball” என்று போற்றப்படுகிறது..
()--((-------------------))--()
:: பஸ் தினம் ::
வர வர நம்ம பசங்களுக்கு எதுயெதுக்கு தினம் கொண்டாடுறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சி.. இப்பல்லாம் வருடந்தோறும் பஸ் தினம் கொண்டாடறாங்க.. வருடம் முழுசும் அந்த நடத்துனரையும் ஓட்டுனரையும் பாடாபடித்திட்டு எடுக்க வேண்டியது.. பஸ் தினமுன்னு சொல்லி கூத்தடிக்கிறாங்களே அன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவங்களை நிம்மதியா விடுறாங்களான்னா, அதுவும் இல்லை.. பஸ்ஸுக்கு மாலையெல்லாம் போட்டு, தோறணமெல்லாம் கட்டி, இனிப்புகள் எல்லாம் குடுத்து பின்னர் தான் அவங்க அட்டகாசங்கள் அரங்கேறும்.. வெட்டபோற ஆட்டுக்கு மஞ்சள் தெளிச்சி மாலையெல்லாம் போட்டு கூட்டிட்டு போறது போல.. எங்கயிருந்து இத கண்டுபிடிச்சாங்களோ தெரியல.. நேற்று பச்சையப்பன் கல்லூரி பஸ் தின கொண்டாட்டம் பலருக்கு திண்டாட்டமா முடிஞ்சிருக்கு.. 300மாணவர்கள் மேல போலீஸ் வழக்கு பதிவு செய்திருக்கு.. என்ன கொடுமைங்க.. டியூப் லைட்டெல்லாம் பயன் படுத்தி சண்டை போட்டிறுக்காங்க.. ஒன்னும் சொல்லறதுக்கில்லை..
()--((-------------------))--()
:: இன்று நாள் இப்படி ::
- செல்வி. ஜெயலலிதா (1948) பிறந்தது இன்று தான்..
- இன்று உலகில் அனேகம் பேர் பயன்படுத்தும் / ஆசைப்படும் iPod, iPhone, Mac.. இதனை நமக்காக கனவு கண்டு தயாரிக்கும் Apple நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்தது 24 பிப், 1955.
()--((-------------------))--()
::நண்பர் சொன்ன குட்டி கதை::
ஒரு வீட்டுல இரண்டு ரூம் இருந்துச்சாம்.. ஒவ்வொரு ரூம்லவும் ஒரு டேபிள் நிறைய சாப்பாடு இருக்குமாம்.. இரண்டு ரூம்லயும் சாப்பிடறதுக்கு வச்சிருந்த ஸ்பூன் ரொம்ப நீளம்.. அந்த ஸ்பூனால தான் சாப்பிடனும்.. அது தான் கண்டிஷன்.. உள்ள போனவங்க யாராலயும் எடுத்து சாப்பிடவே முடியல..
முதல் ரூம்ல இருந்தவங்க கொஞ்சம் யோசிச்சி ஒரு வழி கண்டுபிடிச்சாங்க.. அதன்படி, ஒருத்தர் ஸ்பூன்ல சாப்பாட்டையெடுத்து எதிர்ல இருக்கறவருக்கு ஊட்டிவிடுவார்.. அதே போல அவரும் இவருக்கு ஊட்டிவிடுவார்.. இப்படியே முதல் ரூமில் இருந்தவங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாங்க..
இரண்டாவது ரூமில் இருந்தவங்க யாரும் விட்டுக்கொடுக்கும் எண்ணமில்லாம, அந்த பெரிய ஸ்பூனால எடுத்து அவங்களே சாப்பிட முயன்றபடியே சாப்பாட்டைக் கீழ மேல சிந்தறாங்களே தவிற யாருமே சாப்பிடல..
அந்த முதல் ரூம் தான் சொற்கம்.. இரண்டாவது ரூம் தான் நரகம்..
நமக்கு வேண்டியது எல்லாம் நம்மைச் சுத்தியே இருக்கு.. நாம எடுத்துகற விதத்தில் தான் அது நமக்கு நல்லதா கெட்டதான்னு முடிவு செய்யப்படுகிறது..
நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்..
மீண்டும் சந்திப்போம்.. வரட்டா...
அன்புடன்,
தஞ்சாவூர் மாலைகள்_கிரிக்கெட் ஸ்பெஷல்
11:15 AMநாட்டுல என்னன்னமோ நடக்குது.. நடக்கறது நடந்துட்டு போகட்டும்.. நாம நம்ம வேலையப் பார்ப்போம் - ஒழுங்கா..
இந்த வாரம் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்..
So... இந்த வாரம் நமக்கும் கிரிக்கெட் ஸ்பெஷல்.. சில ஆச்சர்யமான வியப்பான கிரிக்கெட் தகவல்கள்..
1975ல் ஆரம்பித்த முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் 1999ல் நடைபெற்ற போட்டி வரை நடந்த 7 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் அரையிறுதியில் ஆட்டநாயகன் (Man of the Match) விருது பெற்றவரே இறுதி போட்டியிலும் ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார்..
1975 - விவியன் ரிச்சர்ட்ஸ்
1979 - கிளைவ் லாயர்டு
1983 - கபில் தேவ்
1987 - டேவிட் பூன்
1992 - வாசிம் அக்ரம்
1996 - அரவிந்த டி சில்வா
1999 - ஷேன் வார்னே
()--((-------------------))--()
கிளைவ் லாயர்டு கேட்ச் பிடிக்காததால் 1979ல் கோப்பையை வென்றது மே.இந்திய தீவுகள் அணி.. சரியாத் தான் படிச்சீங்க.. கேட்ச் பிடிக்காததால்.. இறுதி போட்டியில், பாய்க்காட் குடுத்த மிகச் சுலபமான கேட்சை மிகத் திறமையான பீல்டரான கிளைவ் லாயர்டு தவற விட்டார்..

அதனால் பாய்க்காட் அவுட்டாகாமல் மிக மொக்கையாக ஆடி 105 பந்துகளில் வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்து பின்னர் அவுட்டானார்.. அடுத்து வந்தவர்களெல்லாம் மிகக் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்க முயற்சித்து அவுட் ஆனார்கள்.. இதனால் மே.இ.தீவுகள் கோப்பையைத் தட்டிச் சென்றது...
()--((-------------------))--()
1983 உலகக் கோப்பை இந்தியா வென்றது சரித்திரம்.. ஜூன் 18ம் தேதி அன்று கபில் தேவ் என்ற தனி மனிதனின் ருத்ரதாண்டவம் அரங்கேறியது.. வெறும் 17 ரன்களுக்கு 5 விக்கெட்களைப் பறிகொடுத்த பரிதாப நிலையிலிருந்த இந்திய அணியை தனி மனிதனாக கரை சேர்த்தது அன்று அங்கிருந்த 8000 சொச்சம் பார்வையாளர்கள் தவிர வேறு யாருக்குமே காணக்கிடைக்கவில்லை தெரியுமா?? அன்றைக்கு தொலைக்காட்சி நிறுவனம் BBC

ஒன்றே ஒன்று தான்.. அவர்களும் அன்று வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள்.. கபில் தேவின் ஆட்டத்தை படம் பிடிக்கவேயில்லை..
அதே ஆட்டத்தில் இன்னொரு சுவாரசியமான நிகழ்ச்சி..
5 விக்கெட்களை இழந்து, வீடு திரும்ப வேண்டியது தான் என்ற மனோநிலைக்கு வந்துவிட்டனர் நம் வீரர்கள்.. அப்போது தான் கபில் களமிறங்கினார்.. அன்று முதலிலேயே அவுட்டான ஸ்ரீகாந்த் காப்பி அருந்திக்கொண்டு தன் மனைவியுடன் புல்வெளி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த போது தான் கபில் தன் வித்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தார்.. நமக்கு, இந்தியர்களுக்கு தான் புத்தி சரியா வேலை செய்யுமே.. உடனே யார் யார் எங்கிருந்தார்களோ அங்கங்கே இருக்க வேண்டுமென அணியின் மேனேஜர் உத்தரவிட்டுவிட்டார்.. ஆட்டம் முடியும் வரை உடல்நிலை சரியில்லாமலேயே ஸ்ரீகாந்த் புல்வெளியிலேயே நின்று பார்த்தார்..
()--((-------------------))--()
சச்சின் டெண்டுல்கர் பேட்ஸ்மேன் ஆவதற்கு காரணமே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும்,

சென்னை MRF Pace Foundation கோச்சுமான திரு.டென்னிஸ் லில்லி தான்.. சச்சின்

வேகப்பந்து வீச்சாளராக பயிற்சியெடுக்க சென்னைக்கு வந்தார்.. அவரது பேட்டிங் திறமையைப் பார்த்து லில்லி தான் அவரை பேட்டிங் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்..
சச்சின் Straight Drive அநாயாசமாக விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.. குறிப்பிட்ட அந்த முறை அவருக்கு எப்படி வந்தது என்பது தெரியுமா??? பம்பாயில் குறுக்கு சந்துகளில், இருபுறமும் இருக்கும் வீடுகளில் அடிபடாதவாரு விளையாடி விளையாடி தான் அவர் இந்த முறையில் வித்தகரானார்..
()--((-------------------))--()
சவுரவ் கங்கூலி எப்படி இடது கை ஆட்டக்காரரானார் என்பது ஒரு சுவாரஸியமான கதை..
சிறு வயதில் தெருக்களில் விளையாடி வந்த கங்கூலி மற்றும் நண்பர்கள்.. அப்போது (இப்போதும் இந்தியாவெங்கும் எழுதப்படாத சட்டம்)
வீட்டுக்குள் பந்தடித்துவிட்டால், அடித்தவர் தான் எடுத்துவர வேண்டும்.. கங்கூலி விளையாடும் தெருவில் இடதுப் பகுதியில் இருந்த அடுக்கு மாடி வீடுகளின் மேல் அவருக்கு கொள்ளை ஆசை.. ஆட்ட விதிப்படி பந்தை வீட்டுக்குள் அடித்தவர் தானே எடுத்துவர வேண்டும்.. அதற்காகவே கங்கூலி இடதுகையால் விளையாடி வீட்டுக்குள் அடித்து உள்ளே சென்று வருவார்.. அப்படி பயின்றது தான் பின்னாளில் இடதுகையாட்டத்தில் முத்திரை பதிக்க உதவியது..
வீட்டுக்குள் பந்தடித்துவிட்டால், அடித்தவர் தான் எடுத்துவர வேண்டும்.. கங்கூலி விளையாடும் தெருவில் இடதுப் பகுதியில் இருந்த அடுக்கு மாடி வீடுகளின் மேல் அவருக்கு கொள்ளை ஆசை.. ஆட்ட விதிப்படி பந்தை வீட்டுக்குள் அடித்தவர் தானே எடுத்துவர வேண்டும்.. அதற்காகவே கங்கூலி இடதுகையால் விளையாடி வீட்டுக்குள் அடித்து உள்ளே சென்று வருவார்.. அப்படி பயின்றது தான் பின்னாளில் இடதுகையாட்டத்தில் முத்திரை பதிக்க உதவியது..()--((-------------------))--()
இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான அசாருத்தீன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது ஒரு ஆஃப் ஸ்பின்னாராக தான் என்பது விந்தையான விஷயம்..
()--((-------------------))--()
1974 முதல் 1991 வரை 17ஆண்டுகள் முடிசூடா மன்னனாக விளங்கிய விவியன் ரிச்சர்ட்ஸ் ஒரு முறை கூட ஹெல்மெட் அணிந்து விளையாடியதே இல்லை..
()--((-------------------))--()
இந்த விஷயங்கள் சுவாரசியாமா இருந்திருக்குன்னு நினைக்கிறேன்.. உங்களுக்கும் இது போல சுவாரசியமான நிகழ்ச்சிகள் தெரிந்தா சொல்லுங்களேன்..
சரி மக்கள்ஸ்... இப்போதைக்கு அம்புட்டு தான்.. சிரிச்சிட்டே இருங்க.. சந்தோஷமா இருங்க..
மீண்டும் சந்திப்போம்..
With Love,
உருளைக்கிழங்கு சுக்கா வறுவல்..
12:49 PM
சமையல் குறிப்பு பதிவுசெஞ்சி ரொம்ப நாள் ஆச்சி.. ஆமா, வீட்டுல சமைச்சாத் தானேன்னு குமாரு சொல்லறத கண்டுக்காதீங்க.. இன்னைக்கு வீட்டுல இருந்ததால புதுசா ஒரு ஐட்டம் செய்து பார்ப்போமேன்னு தோணிச்சி.. சரின்னு சமையலறைக்குள்ள போய் என்னல்லாம் இருக்குன்னு பார்க்கலாமுன்னு ஒரு ஆராய்ச்சி செய்தாத் தான் தெரியுது, ஒன்னுமேயில்லைன்னு.. :(
அதுக்காக முயற்சியில பின் வாங்கிடுவோமா நாம?? நாம தான் முன் வச்ச கால பின் வைக்க மாட்டோமே.. ஹி ஹி.. ஓடி போய் கடையில சில ஐட்டம் வாங்கிவந்துட்டேன்.. இப்போ எல்லாம் ரெடி..
சரி.. இன்னைக்கு என்னா புது ஐட்டம்னா, “உருளைகிழங்கு சுக்கா வறுவல்”
தேவையான பொருட்கள்:
சாப்பிட்டா எப்படி இருக்குமுன்னு நீங்களே சாப்பிட்டு சொல்லுங்க..
டிஸ்கி:: உருளைக்கிழங்க கருகவிட்டுட்டு பேச்சாடா பேசறன்னு யாரும் சொல்லப்படாது..
அதுக்காக முயற்சியில பின் வாங்கிடுவோமா நாம?? நாம தான் முன் வச்ச கால பின் வைக்க மாட்டோமே.. ஹி ஹி.. ஓடி போய் கடையில சில ஐட்டம் வாங்கிவந்துட்டேன்.. இப்போ எல்லாம் ரெடி..
சரி.. இன்னைக்கு என்னா புது ஐட்டம்னா, “உருளைகிழங்கு சுக்கா வறுவல்”
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு - 2
- வெங்காயம் (பெரியது) - 1
- தக்காளி - 1
- கடுகு - 1/4 டீ ஸ்பூன்
- உ.பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 2 கொத்து
- கொத்தமல்லித் தழை - 3 கொத்து
- உருளைக்கிழங்கை சதுரமாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- நறுக்கியத் துண்டுகளை, கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.
- பின்னர் அதனுடன், சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக பெறட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பை பற்ற வைக்குமுன், எண்ணைச் சட்டியை அடுப்பின் மேல் வைக்கவும். பின்னர் அடுப்பைப் பற்ற வைக்கவும். (அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, சட்டியைத் தேடி எடுத்து வைத்தால், கேஸ் வேஸ்டாப் போகும்.. ஒரு சமூக விழிப்புணர்வு தான்)
- சட்டி சூடானவுடன், சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு தாளித்துக்கொள்ளவும்.
- கடுகு வெடித்தவுடன், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் பொண்ணிறமாக வதங்கியவுடன், தனியேவைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, நன்றாக வறுக்கவும்..
- ஒரு மூடி போட்டு சட்டியை மூடிவைக்கவும்.. அவ்வப்போது எண்ணெய் சேர்த்து வறுக்கவும்.
- சாதாரணமாக உருளைகிழங்கு பொன்னிறமாக வறுபட்டவுடன் எடுத்துவிடுவார்கள்.. ஆனா, சுக்கா வறுவலுக்கு அப்படி அவசரப்பட்டு எடுக்க கூடாது..
- அடுப்பைக் குறைவான நெறுப்பில்வைத்திருப்பது இங்க ஒரு சூட்சமம்..
- நன்றாக வறுக்கவும்..
- வறுக்கவும்..
- வறுக்கவும்..
- வறுக்கவும்..
- சிறிது நேரம்களித்து, உருளைக்கிழங்கு அடிபிடிக்க ஆரம்பிக்கும்..
- அப்போது, மீண்டும் சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கவும்.
- பின்னர், மூடிவைத்துவிடவும்..
- சிறுது நேரம்களித்து, மூடியைத் திறந்து பார்த்தால், நன்றாக அடிபிடித்து இருக்கும்.. ஆகா நம்ம “உருளைக்கிழங்கு சுக்கா வறுவல்” தயார்..
- ஒரு தட்டில் எடுத்து, கொத்தமல்லித்தழைகளை நறுக்கி, மேலே தூவிவிடவும்..
சாப்பிட்டா எப்படி இருக்குமுன்னு நீங்களே சாப்பிட்டு சொல்லுங்க..
டிஸ்கி:: உருளைக்கிழங்க கருகவிட்டுட்டு பேச்சாடா பேசறன்னு யாரும் சொல்லப்படாது..
OMR சுங்கச் சாலை - ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் ஊழல் !!
1:55 PMமக்களே, நண்பர்களே இங்கே சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் சமூகத்தில் நடப்பவைகளை பதிவு செய்யவே.. பணம் மிச்சம் செய்யவோ / கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றவோ / யாரும் இதனைப் பின்பற்றவோ அல்ல..
“பழைய மகாபலிபுரம் சாலை” (OMR) பெருங்குடியிலயிருந்து நாவலூர் வரை கட்டண சாலையென்பது அனேகமா எல்லாருக்குமே தெரியும்.. (அந்த சுங்க சாலை வெறும் 14கிமீ..

ஒரு சுங்க சாலைக்கான எந்த ஒரு தகுதியுமே இல்லாத சாலையது என்பது இங்கே சொல்லியாக வேண்டும்.. அதற்கே கட்டணம் ரூ.17/- என்பது பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டியது). இதுல கொடுமை என்னன்னா, காலை ஒரு சுங்கச் சாவடியில பணம் கட்டிட்டு மீண்டும் மாலை அதே சுங்கச் சாவடி வழியா வெளியேறினா மீண்டும் பணம் கட்ட வேண்டும்.. ஆனா பணம் கட்டாமலே அனேகம் பேர் அந்த சாலையைப் பயன்படுத்தறாங்க தெரியுமா??
துரைப்பாக்கம் - பல்லாவரம் 200அடி சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிக்கு சுமார் 100 அடி முன்னும் பின்னும் குறுக்கு சாலைகள் இருக்கு.. முன்னர் இருக்கற சாலையில சென்று அடுத்த சாலையில வந்திடலாம்.. அதிகபட்சம் 1/2 கிமீ தான் அதிகம் சுற்ற வேண்டும்.. அப்படி வருகிறவர்கள் சுங்க வரி கட்டுவதேயில்லை.. vice versa..
(பல்லாவரம் - துரைப்பாக்கம் சுங்கச்சாவடி)
மேடவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் சுங்கசாவடியில நேரே கி.க.சா (அதாங்க ECR) போறேன்னு சொன்னா, அவங்க Rs.0/- அப்படின்னு ஒரு சீட்டு தருவாங்க.. vice versa.. ஆனா அவங்க நேரே போறாங்களான்னு யாருமே கவணிக்கறதில்லை.. ஆக உள்ள போயிட்டாங்கன்னா, நாவலூர் - பெருங்குடி எங்க வேணும்னாலும் போகலாம்.. vice versa..
(மேடவாக்கம் - ECR)
சரி இது மேடவாக்கம் அல்லது ECR லயிருந்து போகிறவங்களுக்கு.. OMR ல அல்லது ECR பகுதியில இருக்கறவங்க OMR பயன்படுத்த என்ன செய்யறாங்க??? மேல படிங்க..
ECR - OMR சுங்கச்சாவடிக்கு 100அடி முன்னர் கிராமநெடுஞ்சாலை இருக்கு.. அதில் இடதோ வலதோ திரும்பி மீண்டும் OMR வந்து சேர்ந்துக்கலாம்..
வேறுவழியே இல்லாம சுங்கம் கட்டவேண்டிய இடங்கள் - நாவலூர் மற்றும் பெருங்குடி.. ஆக்ட்சுவலி அதுக்கும் வழிகள் இருக்கு.. கொஞ்சம் சுத்து ஆகவே அதை விட்டுடறாங்க..
(பெருங்குடி சுங்கச்சாவடி)
ஒரு நாளைக்கு ஒருவர் இப்படி மிச்சம் செய்யும் பணம் 34 ரூபாய்.. அதுவே ஒரு மாதத்திற்கு குறைந்தது 680 ரூபாய் (மாதம் 20 நாள் வேலை என்ற கணக்கில்).. வருடத்திற்கு 8160 ரூபாய்.. குறைந்தது 100 வண்டிகள் தினமும் இப்படி சுங்க வரி செலுத்தாமல் செல்கின்றன.. ஆக சுமார் 8லட்சத்து 16ஆயிரம் ரூபாய் காந்தி கணக்குக்கு போகுது...
ஒரு சுங்கச்சாவடி அமைக்கும் போது இதெல்லாம் கணக்குல எடுத்துத்தான் சுங்கசாவடிக்கு இடம் தேர்வுசெய்தார்களா??? ஏனுங்க 100அடியில இருக்கற குறுச்சாலைகள் கூடவா இவங்க கவனத்துலயிருந்து தப்பிச்சிடிச்சு??? இல்ல நாமெல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சிட்டாங்களா???????
Disclaimer:: இது யாரும் பயன்படுத்துவதற்காகச் சொல்லப்பட்டது அல்ல.. பயன்படுத்தி அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு (பயனர்கள் & அரசு) கம்பெனி பொறுப்பேற்காது..
தஞ்சாவூர் மாலைகள் v_1002.11
11:44 AMவணக்கம் நண்பர்களே.. நல்லா இருக்கீங்களா???

நேற்று காலை 3 சிறுவர்கள் பேசிகிட்டு போனாங்க.. எப்படி பார்த்தாலும் அந்த பசங்க மூன்றாம் அல்லது நான்காம் தான் படிப்பாங்க.. அவங்க என்ன பேசினாங்க, எந்த விஷயம் என்பதெல்லாம் எனக்கு தெரியாது.. என்னை அவங்க கடந்து சென்ற 1/2 நிமிட நேரத்தில அவங்க பேசினது இங்கே...
முதலாமவன்: டேய் இன்னைக்கு தான் தரப்போறாங்க.. எங்களுக்கு தருவாங்கன்னு அம்மா சொன்னாங்க
இரண்டாமவன்: போடா அதெல்லாம் குழுல இருக்கறவங்களுக்கு மட்டும் தான் தருவாங்க...
மூன்றாமவன்: பணக்காரங்கதான் குழுல இருப்பாங்க.. அப்போ நமக்கு கிடையாதா???
என்ன கொடுமைங்க இது??? பத்து வயசு பையனுக்கு என்ன தெரியும்?? பிஞ்சு மனசுல நஞ்ச விதைக்கிறோமா????
()--((-------------------))--()
யானைக் கதையொன்னு இருக்கு..
அவ்வளவு பெரிய யானையைச் சின்ன ஒரு சங்கிலியால் தான் கட்டியிருப்பாங்க.. அவ்வளவு பெரிய யானையை இந்த சின்ன சங்கிலி எப்படி கட்டிப்போடுது???

அங்க தான் சைக்காலஜி வேலை செய்யுது.. யானை சின்ன வயசுல இருக்கும் போது மொத்தமா ஒரு சங்கிலியால கட்டி போட்டு பழக்கியிருப்பாங்க.. காலம் ஆக ஆக.. அந்த சங்கிலி அளவு சின்னதா போயிடும்.. ஆனா யானை மனசுல அந்த மொத்த சங்கிலியோட கிலி தான் இருக்கும்.. ஆக யானை அந்தாண்ட இந்தாண்ட நகர முயற்சி செய்யாது...
யானைக்கு இந்த லாஜிக் சரி.. ஆனா டாட்டா சஃபாரிக்கு?????
தஞ்சையில் எடுத்தது இந்த படம்...
()--((-------------------))--()
மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளதாக மின்னஞ்சல் வந்துள்ளது.. இது எந்த அளவு உண்மைன்னு தெரியல.. உண்மையா இருந்தா ரொம்ப நல்லது.. தெரிஞ்சவங்க சொல்லுங்க..
“யாராவது ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பாங்க் பாஸ்புக், வாக்காளர் அட்டை போன்றவற்றை தவறவிட்டிருந்து நாம் கண்டெடுத்தால் அதனை அருகில் இருக்கும் தபால்பெட்டியில் போட்டுவிட வேண்டும். அந்த ஆவணம் சரியான நபர்க்கு போய் சேர்ந்துவிடும். தபால் செலவு அவரிடம் பெறப்படும்..”
()--((-------------------))--()
வரலாறு முக்கியம் அமைச்சரே::
1870 - YWCA நியுயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது..
1931 - புது தில்லி இந்திய தலைநகராக இன்று முதல் செயல்படத்துவங்கியது..
1940 - முதல் Tom and Jerry படமான Puss Gets the Boot வெளியிடப்பட்டது..
1972 - 1998ல் சச்சினால் ஓட ஓட விரட்டப்படுவோம் எனத் தெரியாமல் ஆஸ்திரேலிய வீரர் Kasprowicz பிறந்தது இன்று தான்..
()--((-------------------))--()
OMR சாலையில் சுங்கவரி கட்டாமல் மக்கள் எப்படி போறாங்கன்னு நாளைக்கு வெளிவரும்.. கண்டிப்பா வந்து பாருங்க.. (விளம்பரமும் முக்கியம் அமைச்சரே)
()--((-------------------))--()
இப்போதைக்கு அவ்வளவே.. Smile is the second best thing you can do with your lipsன்னு யாரோ சொல்லியிருக்காங்க.. மனம்விட்டு நல்லா சிரிங்க, சந்தோஷமா இருங்க..
பிடிச்சிருந்தா நல்லாதா 4 வார்த்தை சொல்லிட்டு போங்க.. பிடிக்கலைன்னாலும் திட்டிட்டு போங்க, திருத்திக்கறேன்.. ஆனா ஏதும் சொல்லாம போகாதீங்க..
மீண்டும் சந்திப்போம்..





